சீயோன் மலை அதிலே - Sion Malai Athile

சீயோன் மலை அதிலே

சிங்கார குன்றதிலே

சிறப்போடு நிற்கிறவள் யாரோ

தன் மீட்பரைச் சாற்றுபவள் யாரோ

ஆட்டு குட்டிக்குமாய் அன்பர் செய்கைக்குமாய்

ஆட்டு குட்டிக்குமாய் அன்பர் செய்கைக்குமாய்

ஓயாமல் போற்றுபவள்தானே

ஓயாமல் போற்றுபவள்தானே - சீயோன்

களங்கமில்லாதவளாம் கன்னிகைதானவளாம்

கர்த்தனுக்கேற்றவள் இவளாம்

அவள் காதல் எந்நாளும் அவர் மீதே

கர்த்தர் வரவுக்காய் காத்திருந்தவளே

கற்புடையவளே பாரீர் - சீயோன்

வாயில் கபடமில்லை வஞ்சனைதானுமில்லை

ஆடை பிரகாசமாய் அணிந்தாள்

தன் காதலன் ரத்தத்திலே தோய்ந்தாள்

தன் தேவ நாமமே நெற்றியில் தோணுதே

அவ்வலங்காரமே ஆஹா - சீயோன்

மணவறைதான் அதிலே மறைந்திடுவாள் அவளே

மன்னன் அழைக்கும் தொனியோடே

மிக மாண்புடனே வாழ்ந்திடுவாளாடி

வா என் மணாளியே என்பார் அந்நாளிலே

செல்லுவேன் நானுமே ஆமென் - சீயோன்

சீயோன் மலை அதிலே

சிங்கார குன்றதிலே

சிறப்போடு நிற்கிறவள் யாரோ

சீயோன் மலை அதிலே

சிங்கார குன்றதிலே

சிறப்போடு நிற்கிறவள் யாரோ

தன் மீட்பரைச் சாற்றுபவள் யாரோ

தன் மீட்பரைச் சாற்றுபவள் யாரோ

சீயோன் மலை அதிலே

சிங்கார குன்றதிலே

சிறப்போடு நிற்கிறவள் யாரோ

தன் மீட்பரைச் சாற்றுபவள் யாரோ

தன் மீட்பரைச் சாற்றுபவள் யாரோ

ஆட்டு குட்டிக்குமாய் அன்பர் செய்கைக்குமாய்

ஆட்டு குட்டிக்குமாய் அன்பர் செய்கைக்குமாய்

ஓயாமல் போற்றுபவள்தானே

ஓயாமல் போற்றுபவள்தானே